திருப்பதியில் கோவில் கொண்டுள்ள இறைவனை நாள்தோறும் லக்ஷக்கணக்கான பக்தர்கள் தரிசித்த வண்ணம் உள்ளனர். அவரை தரிசிக்க விரதமோ வேறு எந்த வித கட்டுப்பாடுகளோ தேவை இல்லை. தூய மனமும் தரிசிக்க வேண்டும் என்ற அவாவும் மட்டுமே போதும். ஆயினும் ஆலயத்தார் இந்துக்கள் அல்லாதோரை ஆலயத்தில் அனுமதிப்பதில்லை. இதற்கு காரணம் ஒவ்வொரு மத சம்பிரதாயத்தையும் மதிக்க வேண்டும் என்பதுதான். யார் வேண்டுமென்றாலும் வந்து போக ஆலயங்கள் ஒன்றும் அருங்காட்சி சாலைகள் அல்ல. இது அனைத்து இந்து கோவில்களிலும் பின்பற்றப்படும் முறைதான் என்றாலும் திருப்பதியில் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கின்றார்கள். இறைவன் மீது அசையாத நம்பிக்கையை வெளிப்படுத்தி ஒரு உறுதி மொழி பத்திரத்தில் கையோப்பமிட்டாலே போதும். அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இப்படி ஒரு உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிடாமல் சென்றார் என்று திரு. ஜகன் மோகன் ரெட்டி என்கிற ஆந்திர அரசியல் வாதிமீது சமீபத்தில் (26/04/2012) குற்றச்சாட்டு எழுந்தது. அவர் கிறித்தவ மதத்தை பின்பற்றுபவர் என்றும் இவ்வாறு உறுதி மொழி அளிக்காமல் சேர்ந்து கோவில் சட்ட திட்டங்களை மீறிய செயல் என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஜகன் மோகனோ தான் ஏற்கெனவே 2009 இல் முதன் முறையாக சென்ற பொது அவ்வாறு உறுதி அளித்திருப்பதாகவும் மறுபடி மறுபடி அளிக்க வேண்டியதில்லை என்றும், தனது தந்தையார் திரு. ராஜசேகர ரெட்டி ஆந்திரத்தின் முதல்வராக இருந்த போது பலமுறை திருப்பதி சென்று இறைவனை தரிசித்ததாகவும் அப்பொழுதெல்லாம் இது போன்று சான்றிதழ் கேட்டதில்லை என்றும் கூறுகிறார்.
அவர் கூறுவது நியாயமே. ஜகன் மோகன் ஒரு பிரபல மனிதர் என்றும் அவருடைய மதம் கிறித்தவம் என்பது எல்லாருக்கும் தெரிந்திருப்பதால் இப்படி கேட்கிறார்கள். ஆனால் லக்ஷக்கணக்கில் வரும் பக்தர்களில் யார் இந்து கிறித்தவன் முஸ்லிம் என்று யார் கண்டுபிடிப்பது. கூட்டத்தோடு கூட்டமாக வருகிறார்கள் போகிறார்கள். இவர்கள் எல்லாம் வழிய சென்று எந்த உறுதி மொழி பத்திரத்திலும் கையொப்பம் இடுவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் பிரபல மனிதர்களை மட்டும் குறி வைத்து பேசுவது நியாயம் இல்லை. இது போன்றுதான் குருவாயூர் கோவிலிலும் பிற மதத்தவர் வந்தால் சுத்தி கரிப்பு செய்கிறார்கள். அதாவது கோவிலையே கழுவி விடுகிறார்கள். வயலார் ரவியின் மகனின் திருமணம் அந்த கோவிலில் நடை பெற்றது. திருமணம் முடிந்தவுடன் கோவிலை கழுவி தள்ளினார்கள். அதற்கு காரணம் வயலாரின் மனைவி கிறித்தவ மதத்தை சார்ந்தவர் என்று கூறப்பட்டது. வயலாரை போல பிரபலம் ஆகாத சாதாரண மனிதர்கள் வந்திருந்தால் இவ்வாறு செய்திருப்பார்களா என்பது ஐயமே. இப்படி செய்வது ஒருவகையில் பிரபல மனிதர்களுக்கு இழைக்கும் அநீதியாகவே ஆகிறது. இத்தகைய நிலையை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தார் சிறிது மாற்றி அமைத்து விடலாம். கீழ்கண்ட படி செய்வதால் இத்தகைய பிரச்சனைகள் எழாமல் தடுக்கலாம்.
தீர்வுகள்:
திருப்பதிக்கு வருபவர்கள் அனைவருமே வேங்கடரமண பெருமாளை தரிசித்து தங்கள் குறைகளை கூறவே வருகிறார்கள். அவ்விறைவன் மீது நம்பிக்கை அற்றவர்கள் அங்கே வருவதில்லை. வேடிக்கை பார்க்க வருபவர்கள் கூட பய பக்தியோடுதான் வருகிறார்கள். ஆகவே அவர்கள் பிரத்தியேகமாக ஒரு உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து போடவேண்டும் என்பதில்லை. இறைவன் மீது அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் இருக்கிறது. ஆயினும் கோவில் நிர்வாகத்தார் தூய இந்துக்களை யும் மற்றும் பெருமாள் மீது பக்தி கொண்டோரையும் மட்டுமே அனுமதிக்க முடியும் என்கிற ஒரு வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இதற்கு தீர்வாக நாம் அனுமதிப்போரை ஒரு சிறிய நடைமுறைக்குள் கொண்டுவந்து விட்டாலே போதும்.
இந்துக்களை பொருத்தமட்டில் கங்கை நீரும், நெற்றியில் அணியும் திலகமும் புனிதம் ஆனவை. எத்தகைய பாவம் செய்திருந்தாலும், தீட்டுக்கள் கலந்திருந்தாலும் கங்கை நீர் அதனை தூய்மை படுத்துகிறது என்கிற நம்பிக்கை உடையவர்கள் அவர்கள். ஆகவே திருப்பதி கோவிலுக்குள் நுழையும் அனைத்து பக்தர்கள் மீதும் தூய கங்கை நீரை தெளிக்க செய்வதன் மூலம் அவர்கள் அடைந்த அனைத்து தீட்டுக்களும் பாவங்களும் அவர்களை விட்டு நீங்கி அவர்கள் புனித தன்மை அடைகிறார்கள். பிற மத தீட்டு என்கிற வினையும் அவர்களை விட்டு நீங்கி விடுகிறது.
அடுத்ததாக அவர்கள் அனைவரின் நெற்றியிலும் திலகமிட்டு அனுப்பலாம். கோவிலுக்குள் இவ்வாறு செல்கிறவர்கள் இந்துக்கள் என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். அவர்கள் வேற்று மதத்தினராயினும் அந்நிய நாட்டவராயினும் இறைவனை தரிசிக்கும் பொழுது இந்துக்களாகவே இருக்கிறார்கள். இதனால் ஒரு குறையும் நேராது. கண்ணுக்கு தெரியாமல் கோவிலுக்குள் செல்லும் வேற்றுமதத்தினரையும் இவ்வாறு செய்யும் சிறு முயற்சியால் இந்துக்களாகவே மாற்றி அனுப்ப முடியும். வேற்று மதத்தினர் என்றில்லாமல் நம் மதத்தினரும் அசுத்தமாக கோவிலுக்குள் செல்வதை தடுக்க இந்த முயற்சி பயன் படும். Om Namo Naaraayanaaya:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக