அரசு ஊழியத்தினால் வேலை நிரந்தரம். திடீர் என்று வீட்டிற்கு துரத்தி விட மாட்டார்கள். மற்றவர்கள் தங்களை சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். வேலை குறைவு அல்லது அவசரமின்றி செய்யலாம். ஊதியம் அதிகம். போனசு, அகவிலைப்படி, நினைத்தபோது விடுப்பு, பொது இடங்களில் மரியாதை என்று சில பல சலுகைகளை அனுபவிக்கலாம். இந்த நோக்கம் தான் பொதுவாக காணப்படுகிறது. அரசு ஊழியத்தை நம்பி இவர்கள் தேர்ந்தெடுக்க இவை மட்டும் காரணாம் அன்று. இன்று நாட்டையே அரித்துக்கொண்டிருக்கும் ஊழலும் ஒரு காரணம். கையூட்டு பெறலாம். அதற்கு தக்க தண்டனை கிடைப்பது அரிது. அப்படியே தண்டனை கிடைத்தாலும் சில சிபாரிசுகளை பெற்று வெளியே வந்து விடலாம். இப்படி பலரின் நினைப்பு ஒடுவதால்தான் அரசு ஊழியத்திற்கு பலத்த போட்டியே நடைபெறுகிறது. ஆயினும் அரசு ஊழியத்தை பெறதவறியவர்கள், அல்லது பெற விரும்பாதவர்கள் என்று ஒரு இனம் உள்ளது. அது அரசு ஊழியத்தை மிகவும் குறைத்தே எடை போட்டு வருகிறது. அவர்கள் அரசு ஊழியத்தை ஒரு ஊழியமாக கருதுவதே இல்லை.
ஒரு அரசாங்கத்தை வழி நடத்துவது என்பது சவாலான காரியம். அதற்கு தகுந்த திறமையுள்ள ஆட்கள் தேவை படுகிறார்கள். முதல் குடிமகனான குடியரசு தலைவர் முதல் கடைநிலை துப்புரவு ஊழியர் வரை பலரை உள்ளடக்கியது தான் அரசு ஊழியம் என்பது. மன்னராட்சி காலத்தில் அனைத்து ஊழியங்களும் மன்னர் என்ற தனி நபரின் சேவையாக தான் இருந்தது. மன்னர் விருப்பப் பட்டால் பணியில் தொடரலாம். இன்றைய குடியாட்சி முறையில் ஒவ்வொரு அரசு ஊழியரும் எந்த ஒரு தனி நபரிடமும் கை கட்டி சேவகம் செய்ய வில்லை. எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற கோட்பாட்டின் படி அரசு ஊழியர் தனக்கே முதாலாளியாகவும் தொழிலாளியாகவும் திகழ்கிறார். இத்தகைய சிறப்பு மற்ற பணிகளில் கிடையாது. அரசு ஊழியர் செய்யும் தவறு ஒட்டு மொத்த சமுதாயத்திற்கு செய்யும் தீங்காக அமைவதால் அவரின் பொறுப்புணர்வு கூடுகிறது. தனி நபரின் ஊழியத்தில் தவறு நேர்ந்தால் அந்த தனிப்பட்ட முதலாளிக்கு மட்டுமே இழப்பு. ஆனால் அரசு ஊழியரின் தவறால் அந்த மனித சமூகமே இழப்பை சந்திக்க நேரிடும்.
ஒரு சராசரி பொது சனம் ஒரு அரசு அலுகலகத்திற்கு சென்று தமக்கு வேண்டிய காரியத்தை எளிதில் சாதித்து விட முடியாது. முதியோர் ஓய்வூதியம் பெற ஒரு பெரியவர் பல முறை நடையாய் நடக்க வேண்டியிருக்கிறது. அவர் சந்திக்க சென்ற நபர் இருக்கையில் இருப்பதில்லை. தேநீர் பருக சென்றிருக்கிறார், விடுப்பில் சென்றிருக்கிறார் என்று ஏதோ ஒரு பதிலைதான் அந்த பெரியவர் கேட்க நேரிடுகிறது. ஒருவாறு அந்த பணியை சாதிக்கும் நிலை வந்தாலும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கையூட்டு தர வேண்டியிருக்கிறது. முடியாது என்று கூறும் பட்சத்தில் அந்த சான்றிதழ் இந்த சான்றிதழ் என்று கூறி அலைகழிக்கிறார்கள்-என்று பொது மக்கள் புகார் கூறுகிறார்கள். இதுதான் இன்று நாம் காணும் உண்மை. இந்த நிலை பொதுவாக இந்தியா எங்கணும் காணப்படுகிறது. இந்த நிலைக்கு யார் காரணம். பொதுமக்கள் அரசு ஊழியர் என்ற ஒரு இனத்தை எளிதில் குறை கூறிவிடுகிறார்கள். ஆனால் இந்த நிலை தோன்ற பொதுமக்கள் மட்டுமே காரணம்.
கையூட்டு பெரும் ஊழியர்களை இனம் கண்டு ஒதுக்க வேண்டும். அவர்களுடன் வர்த்தக, சமூக உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்களை பற்றிய செய்தியே உலகெங்கும் பரப்ப வேண்டும். அதே சமயம் நன்மை செய்யும் ஊழியர்களை பாராட்ட வேண்டும். அவர்களை பற்றி பிறர் முன்னிலையில் புகழ வேண்டும். தங்கள் மகன் அல்லது மகளை பொறுப்புள்ள, நேர்மையான அரசு ஊழியராக உருவாக்க முயற்ச்சிக்க வேண்டும். இந்த நாடு நமது. இந்த பொதுப்பணிகள் நம்முடைய பணிகள். இவற்றில் தொய்வு ஏற்பட்டால் அது நம் நாட்டையே சீர்குலைக்கும் என்கிற எண்ணம் பொது மக்கள் மத்தியில் வளர வேண்டும். நாம் யாருக்காக ஊழல் செய்து சொத்து சேர்க்கிறோமோ அவர்கள் நமக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்த தயாராக இல்லை. அவர்கள் நம் மீது அன்பை செலுத்த போவதில்லை. அவர்களின் குறிக்கோள் நாம் ஊழல் செய்து சேர்த்து வைக்கும் சொத்து மட்டுமே. நம்மை அவர்கள் நிராதரவாக விட்டு வெளியேறி விடுவர். நாம் பிறரின் ஏச்சுக்கும் தூற்றலுக்கும் ஆளாக வேண்டி வரும் பொழுது நமக்கு ஆதரவு சொல்ல கூட நம்மால் வளம் பெற்றவர்கள் அருகில் இருக்க மாட்டார்கள். இதுதான் யுகம் யுகமாக நாம் கண்டு வரும் நிதர்சன உண்மை. எந்த சமுதாயத்தை சுரண்டி நாம் சொத்து செர்த்தொமோ அந்த சமுதாயம் நமக்கு கடைசி காலத்தில் கொள்ளிவைக்கவும், வாய்க்கரிசி போடவும் தயாராக உள்ளது என்பதை ஊழல் செய்யும் ஒவ்வொருவரும் நினைவில் கொண்டால் நாம் ஊழலற்ற சமூகத்தை படைப்பதோடு, அரசு ஊழியம் என்பதே பெருமைக்குரிய பணி என்றும் உணரலாம். Central Government Employees
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக